- Advertisement -
நடிகை குஷ்பு ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று எனக்கு சந்தேகம் வந்ததும் பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த என் கணவர் சுந்தர் சிக்கு போன் பண்ணி சொன்னேன். முதலில் டாக்டரிடம் செக் செய்து கன்ஃபார்ம் பண்ணிட்டு எனக்கு போன் பண்ணுன்னு சொன்னார். மொபைல் போன் புதிதாக வந்திருந்த காலம் என்பதால் பல இடங்களில் சிக்னல் கிடைக்காது. அதனால் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடி காரில் அலைந்திருக்கிறார். சிக்னல் கிடைத்ததும் 10 நிமிஷத்துக்கு மேல நடுரோட்டிலேயே காரில் காத்துகிட்டு இருந்திருக்கிறார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னதும் அவர் அடைந்த அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை என்று தனது முதல் கர்ப்பத்தின் போது சுந்தர்சி காட்டிய அன்பை குஷ்பு பகிர்ந்திருக்கிறார்.





