- Advertisement -
Homeபொழுதுபோக்குடெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் இராமாயணா படம் வரும் 5ல் ரிலீஸ்? - விரைவில் அதிகாரபூர்வ...

டெல்லியில் உள்ள இராஷ்டிரபதி பவனில் இராமாயணா படம் வரும் 5ல் ரிலீஸ்? – விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

இந்தியில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இராமாயணா படத்தின் முதல் பாகம் வருகிற நவம்பர் 5ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள இராஷ்டிரபவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காக திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரன்வீர் கபூர் யாஷ் சாய் பல்லவி மற்றும் படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்திலும் சிறப்பு காட்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் படக்குழு தரப்பில் இருந்தோ குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தோ இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

சற்று முன்