- Advertisement -
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 3 படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தது. அதனால் தர்மன் படம் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்தியன் 3 படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் ஏப்ரல் மாதத்தில் இந்தியன் 3 படத்தை வெளியிடலாம் என்று படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் படத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





