- Advertisement -
நடிகர் மணிகண்டன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் ஏழாவது படிக்கும் போது லீவுல எனக்கு பாஸ் ஆனேன் என்று சொல்லி ஸ்கூலில் இருந்து லெட்டரே வரலே. எல்லோருக்கும் லெட்டர் வந்திருக்கு. எங்க அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் ஸ்கூல் ஆரம்பித்து முதல் நாள் ஸ்கூலுக்கு போனோம். அப்ப வாத்தியார் கிட்ட எங்கம்மா அழுதுகிட்டே இவன் பெயில் ஆகிட்டானா? என்று கேட்டாங்க. இவன் என்னைக்கும் பெஃயிலாக மாட்டான் அப்படீன்னு எங்க வாத்தியார் ஏழு பேர் சேர்ந்து சொன்னாங்க. அப்போ, எனக்கு பணம் காசு கூட நீ சம்பாதித்து தர வேண்டாம். இந்த பேரை மட்டும் சம்பாதித்து கொடு போதும் என்று அன்னைக்கு என் அம்மா என்கிட்ட சொன்னாங்க என்று நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





