- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தும் அது நடக்கலையே? - கண்ணீர் விட்டு அழுத ட்ரோன்ஸ்...

நல்ல படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தும் அது நடக்கலையே? – கண்ணீர் விட்டு அழுத ட்ரோன்ஸ் பட தயாரிப்பாளர்!

- Advertisement -

சமீபத்தில் திரைக்கு வந்த ட்ரோன்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பும் ஆதரவு கிடைத்த நிலையில் அந்த படம் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் ஜிஎம் மோர்கன் கூறுகையில், ஜெயிலர் 2 படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் எங்கள் படத்தை பார்க்க வருவார்கள் என்று நம்பித்தான் ரிலீஸ் செய்தோம். ஆனால் எங்களுக்கு தியேட்டரே தராமல் விட்டுவிட்டார்கள். ஒரு பெரிய படம் வரும்போது சின்ன படங்கள் வரக்கூடாதா? ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். படம் நன்றாக இருந்தும் எங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. நல்ல படத்தை எடுத்துவிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். தியேட்டர் கிடைத்தால் தான் மக்கள் படத்தை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று கூறி அவர் அழுதது இணையத்தில் வைரலாகி உள்ளது.

சற்று முன்