- Advertisement -
நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர் டெவில் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 12ம் தேதி துவங்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் நடிப்பதை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார். இந்த கேரக்டரில் முதலில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. அவர் சட்டசபை தேர்தல் நேரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியதால் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க வேண்டாம் என்று அஜீத்குமார் கூறிவிட்டார். அதன்பிறகு அந்த கேரக்டரில் இப்போது நடிகர் பார்த்திபன் நடிக்கிறார்.





