- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வேடத்தில் நடிக்க உடல் முழுக்க பிளேடால் காயப்படுத்திக் கொண்ட சீனியர் நடிகர் - கடைசியில்...

அந்த வேடத்தில் நடிக்க உடல் முழுக்க பிளேடால் காயப்படுத்திக் கொண்ட சீனியர் நடிகர் – கடைசியில் பறிபோன வாய்ப்பு – நடிகர் அருண்விஜய் வெளியிட்ட தகவல்!

- Advertisement -

எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத்குமார் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். கதாநாயகன் வில்லன் குணச்சித்திரம் என எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் அழுத்தமான முத்திரை நடிப்பை விஜயகுமார் வெளிப்படுத்தி விடுவார். அவரது கம்பீரமான தோற்றமும் குரலும் அவரது நடிப்பை இன்னும் மெருகூட்டி விடுகிறது.

குறிப்பாக நாட்டாமை படத்தில் நடிகர் விஜயகுமார் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதே போல் நட்புக்காக படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சில படங்களில் சில காட்சிகளில் வந்தாலும் அவரது நடிப்பு நேர்த்தியாக இருக்கும். பல படங்களில் அப்பா அண்ணன் தாத்தா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து விஜயகுமார் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பாண்டவர் பூமி என்னை அறிந்தால் கங்கா கௌரி தடம் பிரியம் மலை மலை என பல படங்களில் அருண்விஜய் நடித்திருக்கிறார். ஆனால் அப்பா விஜயகுமார் அளவுக்கு அவரது மகன் அருண்விஜய் நடிப்பில் முக்கிய இடத்தை இதுவரை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அருண்விஜய் கூறியதாவது, அப்பா சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு படத்தில் அப்பாவை முருகன் வேஷம் போட்ட கேரக்டரில் நடிக்க கூப்பிட்டு இருக்காங்க. அப்பா சட்டையை கழட்டிய கழட்டின உடனே இயக்குனர், என்னப்பா இது, உடம்பு முழுக்க முடியா இருக்குதுன்னு சொல்லிட்டார்.

- Advertisement -

கொஞ்சம் நேரம் கொடுங்க சார் என்று சொல்லிவிட்டு வெறும் பிளேடு வைத்து கையால் அப்பா உடம்புல இருந்த முடியை சேவ் பண்ணி இருக்கிறார். அப்போது அங்கங்கே பிளேடு காயம்பட்டு தோல் கிழிஞ்சு ரத்தம் வந்திருக்கு. உடம்பு முழுக்க ரத்தம் ஒழுகிருக்கு. ரத்தம் எல்லாத்தையும் தொடைச்சிட்டு போய் அப்பா இயக்குனரை பார்த்திருக்கிறார்.

ஆனால் அதுக்குள்ள வேற ஒருத்தரை அந்த கேரக்டர்ல நடிக்க போட்டுட்டாங்க. அப்பாவுக்கு அந்த கேரக்டர் நடிக்க வாய்ப்பு கிடைக்கலே. சென்னைக்கு சினிமாவை வாய்ப்புக்காக வந்த ஆரம்பத்துல இந்த மாதிரியான பல கஷ்டங்களை அப்பா கடந்துதான் வந்து இருக்கிறார் என்று நடிகர் அருண் விஜய் அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்