- Advertisement -
நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்போது 3 படங்களை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் தர்மன் கமல் நடிப்பில் சண்டியர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்ற இந்த 3 படங்களையும் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை ரூ. 350 கோடிக்கு விலை பேசி வாங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசன் பிக்பாஸில் பங்கேற் இருப்பதாகவும் இந்த 3 படங்களையும் வாங்க வேண்டும் என்றால் நடிகர் கமல்ஹாசனை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிபந்தனை விதித்தாகவும் ஒரு தகவல் பரவியது. இது முற்றிலும் பொயயான தகவல். அப்படி எல்லாம் எதுவம் நடக்கவில்லை என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





