- Advertisement -
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை திரிஷா நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது, விஜே அர்ச்சனா, ஆணாகப் பிறந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் அளித்த நடிகை திரிஷா கூறுகையில், எனக்கு ஒரு நாள் மட்டுமாவது ஆணாக பிறந்திருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஒரு ஆணின் உடல் அமைப்பு எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆசை. இதை என் அம்மாவிடமும் அடிக்கடி கூறுவேன் என்று நடிகை திரிஷா கூறியிருக்கிறார்.





