- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக இத்தனை கதாபாத்திரங்களை உள்ளே வைத்திருந்தாரா கௌதம் மேனன்... இது மட்டும் நடந்திருந்தா...

வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக இத்தனை கதாபாத்திரங்களை உள்ளே வைத்திருந்தாரா கௌதம் மேனன்… இது மட்டும் நடந்திருந்தா வேற லெவல்ல இருந்திருக்குமே…

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் கௌதம் மேனன். இயக்குனர் திறமை மட்டும் அல்லாமல் தனது நடிப்பின் மூலமும் பலரது பாராட்டுகளை அவர் பெற்றிருக்கிறார்.

மின்னலே திரைப்படத்தில் ஆரம்பித்த அவரது பயணம் தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இயக்குனர் நடிகர் என தொடர்ந்து பிஸியாக அவர் இருந்து வருகிறார். தனது திரை உலக பயணத்தில் காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பிளாக் பஸ்டர் வெற்றி திரைப்படங்களை கௌதம் மேனன் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இன்று வரை அவரது இந்த திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் பலருக்கும் பரீட்சையமான ஒரு காவியம் என்று கூறலாம்.

இப்போது வரை அந்த திரைப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ஏராளமான ரசிகர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். சொல்லப்போனால், தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இது திரைப்படத்தின் ரீ ரிலீசுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

இதில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் அந்த திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை கௌதம் மேனன் பகிர்ந்து உள்ளார். அதில் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யாவின் நடிக்க வைக்க நான் திட்டமிடவே இல்லை.

சூர்யாவின் தந்தையாக மோகன்லால் அல்லது நானா பட்டேகர் என இருவரில் ஒருவரையே நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. இதே போல் சமீரா ரெட்டி நடித்திருந்த மேகனா கதாபாத்திரத்தை ஒரு கற்பனை கதாபாத்திரமாகவே வைத்திருந்தேன். இதில் முதலில் தீபிகா படுக்கோன்னை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் அந்த நேரத்தில் ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் இது நடக்காமல் போனது என்று பேசி இருக்கிறார். கௌதம் மேனனின் இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்