- Advertisement -
தவெக கூட்டணிக்கு வைகோ வந்து விட்டதால் தவெகவில் உங்கள் மரியாதை குறைந்து விட்டதா என்று ஒரு நேர்காணலில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் கூறியதாவது, வைகோ செய்த சதியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் வைகோ இருக்கும் மேடைக்கு நான் போக மாட்டேன். விஜய் இருக்கும் மேடையில் வைகோ வந்தாலும் அந்த மேடைக்கு நான் போக மாட்டேன். சாகும் வரை வைகோ முகத்தில் விழிக்க மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





