- Advertisement -
மதுரையை கதைக்களமாக கொண்டு 22 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படத்துக்கு நடிகர் கமல் சண்டியர் என்று தலைப்பு வைத்தார். இதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தனது படத்துக்கு விருமாண்டி என கமல் பெயர் மாற்றம் செய்தார். ஆனால் தற்போது தனது 237வது படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைத்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் டைரக்ட் செய்கிறார். இப்போது ராஜ்யசபா எம்பி ஆகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் கமல்ஹாசன் இருப்பதால் எந்த தரப்பிலும் எந்த எதிர்ப்பும் காட்ட யாரும் வரவில்லை.





