- Advertisement -
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது புதிய டிரண்ட் ஆக மாறியுள்ளது. இன்றைய இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார் லோகேஷ் கனகராஜ் அட்லி கார்த்திக் சுப்புராஜ் மாரி செல்வராஜ் பா ரஞ்சித் போன்ற பல முன்னணி இயக்குனர்கள் சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கி தங்களத படங்களை தயாரிப்பது மட்டுமின்றி புதிய கலைஞர்கள் பலரை அறிமுகப்படுத்துகிறார்கள். நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது ஒருபுறம் இருக்க, இப்படி இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக மாறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கலையை வளர்க்கும் ஆர்வமா அல்லது அதிக பணம் சம்பாதிக்கும் லாப நோக்கமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.





