- Advertisement -
ஒருமுறை சத்யராஜ் நடித்த ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்து மிகவும் ரசித்த சுருளிராஜன் அவரை நேரில் சந்தித்த போது ஒரு விஷயத்தை கூறியுள்ளார். நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். நீ கண்டிப்பாக 25 வயதிலேயே திருமணம் செய்துகொள். அப்படி செய்துகொண்டால், உனக்கு 50 வயதாகும் போது உன் மகன் வளர்ந்து உனக்குத் துணையாக இருப்பான். உன்னுடைய பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வான் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவுரையை சத்யராஜ் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஒருநாள் தனது காரில் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த போது அவரது மகன் சிபிராஜ் காரை ஓட்டிய போது சுருளிராஜன் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய அறிவுரை அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.





