- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, நானும் தேவாவும் சம காலத்தில் சினிமாவுக்குள் வந்தவங்க. நான் என் ராசாவின் மனசிலே படம் பண்ணிட்டு அடுத்த படம் ராஜா சார் இசையில் தான் பண்ணனும் என்று இருந்தேன். அது பண்ண முடியாத ஒரு சூழ்நிலை உருவாச்சு. அப்போ யாரை வெச்சு பண்ணலாம்ன்னு யோசிக்கும் போது அவர் வைகாசி பொறந்தாச்சுன்னு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்துட்டு வர்றார். எனக்கு 2வது படம். அவருக்கு 3வது படம். அப்படிதான் எங்க சந்திப்பு நடந்தது. அதுதான் ஆத்தா உன் கோவிலிலே படம். அந்த படம் 175 நாள் ஓடுச்சு. தேவா இசையில் ஒத்தையடி பாதையிலே என்ற அந்த ஒரு பாட்டு செம ஹிட் ஆகி என் படத்தை தூக்கி நிறுத்துச்சு. என்னுடைய கேரியர் வெற்றிக்கு பெரிய காரணமே அவர்தான் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.





