- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசைஞானி இளையராஜா கூறியதாவது, எங்க அப்பாவுக்கு ஊரில் கங்காணி ராமசாமி என்று பெயர். பண்ணைபுரத்தில் இருந்து கூலி ஆட்களை ஏலக்காய் எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று வேலை கொடுத்து அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதுதான் அவரது வேலை. அதனால் அவரது பெயர் கங்காணி ராமசாமி. எங்க அப்பாவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 6 குழந்தைகள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள் என்று பின்னர் தெரிந்துக்கொண்டோம். நாங்கள் பார்க்கும் போது அவர்கள் பெரிய அளவில் இருந்தார்கள். பின்னால் அப்பா கிறிஸ்தவராக மதம் மாறிக்கொண்டார். மாரியம்மன் கோவில் திருவிழாவில் எங்க அம்மா தான் முளைப்பாரி எடுத்துக் கொடுப்பார் என்று இளையராஜா அதில் தனது குடும்பம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





