புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு புதுமுகங்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை படமாக தர இயக்குனர் ஆர்கே செல்வமணி விரும்பினார். அதற்காக அப்போது புதுமுகங்களை தேடி வந்தார். ஒரு திருமண விழாவில் ரோஜாவை பார்த்து அவரை செம்பருத்தி படத்தின் கதாநாயகி ஆக்கினார். இந்த படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்க அவரது தந்தை சிவக்குமாரிடம் பேசினார். அவன் இப்போது படித்துக் கொண்டிருக்கிறான். நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று சிவக்குமார் மறுத்துவிட்டார். இந்த நிலையில் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் ஆர்கே செல்வமணிக்கு புத்தாண்டு வாழ்த்து ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பிரசாந்த் படமும் இருந்தது. உடனே இவர்தான் செம்பருத்தி படத்தின் கதாநாயகன் என்று ஆர் கே செல்வமணி முடிவு செய்து அவரை நடிக்க வைத்தார். அந்த படம் வெளியாகி நடிகர் பிரசாத்துக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு பின் இதுவும் பிரசாந்துக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படமாகும்.





