- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கூறியதாவது, நான் டாக்ஸிக் படத்தில் நடிகர் யாஷ் உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது பற்றி எனது கணவர் சித்தார்த் மல்கோத்ரா எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. ஆனால் என் மீது விமர்சனம் எழுகின்றன. திருமணம் ஆன நடிகைகள் மட்டுமே இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்தால் விமர்சனங்களை சந்திக்கிறோம். நடிகர்களுக்கு ஏன் இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை என்று நடிகை கியாரா அத்வானி கோபமாக கூறியிருக்கிறார்.





