- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்?.. என்ன காரணம் தெரியுமா?.. ஷூட்டிங்கிற்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி

அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்?.. என்ன காரணம் தெரியுமா?.. ஷூட்டிங்கிற்கு பாதிப்பு வராமல் இருந்தால் சரி

- Advertisement -

ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்காக தவித்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. வெற்றி பசியில் வெறியோடு காத்திருந்த ரஜினிக்கு ஜெயிலர் படம் முழு விருந்தை படைத்திருக்கிறது.

படத்தின் ரிசல்ட்டை பார்த்து உற்சாகமடைந்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு கார்களையும், செக்கையும் பரிசாக கொடுத்தார். மேலும் படக்குழுவினர் 350 பேருக்கு தங்க நாணயம் பரிசாக கொடுத்து தடல்புடலாக விருந்தும் வைத்தார். இந்தச் சூழலில் ரஜினி – நெல்சன் – சன் பிக்சர்ஸ் கூட்டணி மீண்டும் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே வெளியான தகவல்களின்படி லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணி இணைந்திருக்கிறது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. ஜெயிலர் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் அதுதொடர்பான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டுவிட்டதாம் சன் பிக்சர்ஸ். படத்தின் அறிவிப்பில் தலைவர் 171 என்ற எழுத்தை பார்க்கும்போது இதுவும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகும் என உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் மலேசியா சென்று அந்த நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார். பிரதமர் ரஜினியை சிவாஜி படத்தின் ரஜினி ஸ்டைலில் வரவேற்ற வீடியோ ட்ரெண்டானது. காலையில் மலேசிய சென்ற அவர் மாலை பிரதமரை பார்த்துவிட்டு அன்றைய இரவே சென்னை திரும்பிவிட்டார். எதற்காக திடீரென்று மலேசிய பிரதமரை ரஜினி சந்திக்க வேண்டும் என்ற கேள்வி ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

நிலைமை இப்படி இருக்க அடுத்ததாக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவிருக்கிறாராம். ஒரு மாதம் அங்கு தங்க ப்ளான் செய்திருக்கும் ரஜினி தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை அங்கு மேற்கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரஜினிகாந்த் தனது 170ஆவது படத்திலும் கமிட்டானார். அதனை லைகா நிறுவனம் தயாரிக்க ஜெய் பீம் இயக்குநர் தா.செ. ஞானவேலு இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்தது.

ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தச் சூழலில் நவம்பரில் ரஜினி அமெரிக்கா செல்வதால் ஷூட்டிங்கிற்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் நவம்பருக்கு முன்னதாகவே லம்ப்பாக கால்ஷீட்டை கொடுத்து தனது போர்ஷனை முடித்துவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு அவர் பறக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்