- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷாலுக்கு ‘கம்பேக்’ கொடுத்த எஸ்.ஜே சூர்யா… எத்தனை நடிகர்களுக்கு இவர் இப்படி ‘கம்பேக்’ கொடுத்து, கை...

விஷாலுக்கு ‘கம்பேக்’ கொடுத்த எஸ்.ஜே சூர்யா… எத்தனை நடிகர்களுக்கு இவர் இப்படி ‘கம்பேக்’ கொடுத்து, கை தூக்கி விட்டிருக்காருன்னு தெரிஞ்சா, நீங்களே ஆச்சரியப்படுவீங்க…!

- Advertisement -

எஸ்.ஜே சூர்யா, நடிகர் அஜீத்குமார் நடித்த ‘வாலி’ படத்தின் மூலமாக, தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம், பெரிய அளவில் பேசப்பட்ட, வரவேற்பை பெற்ற படமாக அமைந்து, அஜீத் சினிமா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இன்றும், தனது சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து தந்தது எஸ்.ஜே சூர்யா தான் என்பதை பல இடங்களில் வெளிப்படையாக அஜீத்குமார் கூறிவருகிறார்.

அடுத்து, வழக்கமான விடலைத்தனமாக ஹீரோ வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய்க்கு, ‘குஷி’ படத்தின் மூலம், மிகப்பெரிய வெற்றியை தேடி தந்ததும் எஸ்.ஜே சூர்யாதான். குஷி படத்தை இயக்கி, விஜய் – ஜோதிகா ஜோடிக்கு, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுத் தந்தார். இந்த படத்துக்கு பிறகு, விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ‘இமேஜ்’ கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, பல தோல்வி படங்களை தந்து, அடுத்து சினிமாவில் தன்னை நிரூபிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசனுக்கு, ‘மாநாடு’ படத்தின் மூலம், ஒரு ‘மாஸ்’ ஏற்படுத்தி தந்தவர், அதில் வில்லனாக நடித்த எஸ்.ஜே சூர்யா தான். அவரது ‘தலைவரே, தலைவரே’ என்ற வசனமும், அட்டகாசமான வில்லன் நடிப்பும்தான், படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் மார்க் ஆண்டனி படத்திலும், எஸ்.ஜே சூர்யா நடிப்பு, மிகவும் சிலாகித்து பேசப்படுகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிப்பு அரக்கன் என டைட்டிலில் கொடுத்தது போலவே, நடிப்பில் அசுரத்தனமாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா இல்லை என்றால், இந்த படத்தில் ஒன்றும் இல்லை என்று வெளிப்படையாகவே தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தில் நடித்த விஷாலுக்கு, இந்த படத்தின் வெற்றி, நிச்சயம் கம்பேக் தான் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி அஜீத், விஜய், சிம்பு, விஷால் என தமிழ் பட ஹீரோக்களுக்கு கம்பேக் தரும் ஒரு இயக்குநராக, நடிகராக தமிழ் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.

நடிப்பை வெளிப்படுத்தும் உடல் மொழியிலும், வசனங்களை உச்சரிக்கும் விதத்திலும் ஒரு தேர்ந்த கலைஞனாக எஸ்.ஜே சூர்யா இருப்பதால், அவரது மெருகேறிய நடிப்பு, ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்த விஷாலுக்கு ‘மார்க் ஆண்டனி’படத்தின் வெற்றி, எஸ்.ஜே சூர்யாவின் சப்போர்ட்டால், அடுத்த சுற்றுக்கு முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தி தந்திருக்கிறது.

சற்று முன்