- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கிட்ட ஒரு கதை சொன்னேன்... அப்புறம்... உண்மையைப் போட்டுடைத்த இயக்குனர் சுந்தர் சி...

விஜய் கிட்ட ஒரு கதை சொன்னேன்… அப்புறம்… உண்மையைப் போட்டுடைத்த இயக்குனர் சுந்தர் சி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரர் இயக்குனர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படத்தில் தொடங்கி அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் கமர்சியல் ரகமாகவே இருந்துள்ளன. இதில் அந்தப் படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தான் இங்கு சிறப்பம்சம்.

 

- Advertisement -

நவரச நாயகன் கார்த்திக்கை வைத்து அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தமிழ் சினிமாவின் டெம்ப்லேட் திரைப்படத்திற்கான மையப்புள்ளி என்று கூறலாம். கவுண்டமணியும் கார்த்திக்கும் அந்த அளவு கலகலப்பாக படத்தை இறுதிவரை கொண்டு சேர்த்திருப்பார்கள். இன்று வரை அந்த திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் ஆகிய திரைப்படங்களையும் சுந்தர் சி இயக்கியிருக்கிறார். இதில் அன்பே சிவம் திரைப்படம் தான் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. மொத்தமாக தனது பாணியில் இருந்து விலகி அவர் எடுத்த இந்த திரைப்படம் அந்த சமயத்தில் ஓடவில்லை என்றாலும் இன்று அது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

நாம் இருவர் நமக்கு இருவர், உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர், கிரி, லண்டன், கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு என ஏராளமான திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். நகைச்சுவையை கலந்து கட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படங்கள் திரையரங்குகளையும் கலகலப்பு ஆக்கின. இதைத்தொடர்ந்து அவர் அரண்மனை சீரியஸை எடுத்து வருகிறார்.

 

இதில் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மூன்றாம் பாகம் படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வெளியாகி இருக்கிறது. அரைத்த மாவையே இந்த திரைப்படத்தில் அவர் அழைத்து இருந்தாலும், விமர்சன ரீதியாக படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில் இயக்குனர் சுந்தர் சி பல விஷயங்களை தற்போது பகிர்ந்து உள்ளார். அதில் விஜய்யுடன் அவர் ஏற்பட்ட சந்திப்பை குறித்து பேசி இருக்கிறார்.

 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறினேன். அவருக்கு முதல் பாதி பிடித்திருந்தது. ஆனால் இடைவெளிக்குப் பிறகு அவருக்கு நான் கூறிய கதை பிடிக்கவில்லை. இதனால் நடிக்க மறுத்துவிட்டார். இந்தக் கதையை எடுத்து எப்படியாவது ஜெயித்து காட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. அது என்ன படம் என்று நான் கூற மாட்டேன் அப்படி கூறினால் அந்தப் படத்தில் நடித்தவரின் மனம் புண்படும். உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தையும் முதலில் விஜய் பண்ணுவதாக தான் இருந்தது. ஆனால் தேதி காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.

- Advertisement -

சற்று முன்