- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் - ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர்...

பிரபல நடிகையை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் – ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் என்ன செய்தார் தெரியுமா

- Advertisement -

இந்தியாவின் முக்கிய நகரங்களில் மும்பை மிக முக்கியமானது. இந்தியாவின் நிதி மையமாக விளங்குகிறது. இந்தியாவில், மக்கள் தொகை நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பொது இடங்களுக்கு சென்றுவரும் பெண்கள், பல நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை ஒருவருக்கும் அந்த பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதுகுறித்த வீடியோ பதிவு ஒன்று இப்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், மும்பையில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு தான் இந்த மோசமான ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

தமிழில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில், ஸ்ருதிஹாசன், சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் உடன் புலி, விஷால் உடன் பூஜை, தனுஷ் உடன் த்ரீ, அஜீத் குமாருடன் வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு படங்களில் ஸ்ருதிஹாசன் அதிக படங்களில் நடித்து வருகிறார். இப்போது, மும்பையில் இருந்துகொண்டு, இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

மும்பையில் தனியாக, தோளில் பேக் மாட்டிக்கொண்டு மாடர்ன் உடையில், ஸ்ருதிஹாசன் நடந்து செல்கிறார். அவரை டிப்டாப் நபர் ஒருவர் பின்தொடர்கிறார். முகத்தில் ஸ்டைலிஷ் ஆன தாடி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி காட்சி தரும் அந்நபர் எதுவுமே பேசாமல், ஸ்ருதிஹாசன் பின்னால் நடக்கிறார். அதனால், பதைபதைப்பு அடையும் ஸ்ருதி ஒரு கட்டத்தில், அச்சத்தின் உச்சத்துக்கே போகிறார்.

- Advertisement -

நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியலையே என்று ஆங்கிலத்தில், அவரை பார்த்து கத்துகிறார். இதையடுத்து, ஸ்ருதிஹாசன் அருகில் நிற்கும் அந்த நபர் சிரித்தபடி, வேகமாக நகர்ந்து விடுகிறார். இந்த வீடியோ இப்போது மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் இருக்கும் இந்த காட்சிகளை பார்க்கும் போது அந்த நபர் ஸ்ருதிஹாசனின் ரசிகரா, அல்லது அவரை வேண்டும் என்றே தவறான நோக்கத்தில் பின்தொடர்ந்தாரா என்பது தெரியவில்லை. நடிகர் கமல்ஹாசன் மகளுக்கே பாதுகாப்பில்லையா, என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்