- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் என் கனவு நிறைவேறியது. நீங்க நெனச்சத விட இந்த படம் வேற...

இந்தியன் 2 படத்தில் என் கனவு நிறைவேறியது. நீங்க நெனச்சத விட இந்த படம் வேற லெவலில் இருக்கும் – சித்தார்த் கொடுத்த அப்டேட்

- Advertisement -

ஷங்கரின் இயக்கத்தில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. கடந்த 2020 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தின் காரணமாக மூன்று தொழில்நுட்ப கலைஞர்கள் பலியானார்கள். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிப்போனது.

மேலும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இத்திரைப்படம் டிராப் என்றே கூறப்பட்டது. இந்த நிலையிதான் கடந்த ஆண்டு மீண்டும் இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கியது. ஏற்கனவே லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வந்த நிலையில் ரெட் ஜெயின்ட் நிறுவனமும் இந்த புராஜெக்ட்டுக்கு கைக்கொடுத்து தூக்கியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இதில் முதலில் விவேக், நெடுமுடி வேணு ஆகியோர் நடித்து வந்த நிலையில் இருவரும் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தனர். ஆகையால் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு இருவரின் முகங்களை வேறு ஒரு உருவத்திற்கு பொருத்தி மீதி படப்பிடிப்பை முடித்துவிட முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. கமல்ஹாசனுடன் விவேக் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சித்தார்த், சமீபத்திய பேட்டி ஒன்றில் இத்திரைப்படத்தை குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அந்த பேட்டியில் பேசிய சித்தார்த், “இந்தியன் 2 எனது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என நினைத்து வருகிறேன். அத்திரைப்படம் எந்த மொழியில் வெளியானாலும் கண்டிப்பாக மாஸ் ஹிட் ஆகும். இந்தியன் 2 படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்ததை நான் எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக நினைக்கிறேன்” என கூறியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம்தான் சித்தார்த் அறிமுகமானார். இந்த நிலையில் அப்பேட்டியில் மேலும் பேசிய சித்தார்த், “என்னை அறிமுகம் செய்த இயக்குனருடன் மீண்டும் வேலை செய்கிறேன். கமல்ஹாசனுடன் சேர்ந்து அவர் என்னையும் நடிக்க வைப்பது வேற லெவலாக இருக்கிறது” கமல் சாறோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு. அது இப்போது நிறைவேறியது. நீங்கள் நினைத்து பார்ப்பதை விட இந்த பதம் பல மடைந்து சிறப்பாக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்