- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் படத்தை இயக்க ஆர்வமாக களம் இறங்கிய பிரபல இயக்குனர், பிரேமலதா காட்டிய கெடுபிடியால் என்ன...

விஜயகாந்த் படத்தை இயக்க ஆர்வமாக களம் இறங்கிய பிரபல இயக்குனர், பிரேமலதா காட்டிய கெடுபிடியால் என்ன செய்தார் தெரியுமா? – கேப்டன் ரசிகர்கள் வருத்தம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். துவக்கத்தில் புரட்சிக்கலைஞர் என அழைக்கப்பட்ட அவர், கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த பிறகு, கேப்டன் என்றே அழைக்கப்பட்டார். தேமுதிக கட்சியை துவங்கிய பிறகு, தொண்டர்கள் அவரை கேப்டன் என்று அழைப்பதையே வழக்கப்படுத்திக் கொண்டனர். அதுவே அவரது மறைவுக்கு பிறகும் நிலைத்து விட்டது.

விஜயகாந்தை பொருத்த வரை மற்றவர்களுக்கு உதவும் தாராள மனம் கொண்டவர். பசியாலும், வறுமையாலும் வாடுபவர்களுக்கு உதவும் மனிதநேயம் மிக்கவர். அதே போல் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த மாணவர்களுக்கு யாருமே பட வாய்ப்பு தர முன்வராத போது அவர்களை அரவணைத்துக்கொண்டவர் விஜயகாந்த்.

- Advertisement -

அதனால் விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, சின்னக்கவுண்டர், மாநகர காவல் போன்ற பல படங்கள் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களாகிய ஆபாவாணன், ஆர்கே செல்வமணி, ஆர்வி உதயகுமார் போன்றவர்கள் இயக்கிய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மாபெரும் வெற்றிப் படங்களாகவும் இருந்தன.

அதுமட்டுமின்றி கேப்டன் சினி கிரியேசன்ஸ் மற்றும் ராவுத்தர் பிலிம்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக 40க்கும் மேற்பட்ட பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இயக்கிய படங்களை விஜயகாந்த் தயாரித்து, அவர்களுக்கு வாழ்வு அளித்துள்ளார். இதில் சில படங்களில் அவரும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு ஊமை விழிகள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க போவதாக ஏற்கனவே ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குனர் ஆபாவாணன் கூறியிருந்தார். ஊமை விழிகள் 2ம் பாகத்தில் ஏஐ தொழில் நுட்பத்தில் டிஎஸ்பி தீனதயாளனை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்த திட்டத்தை அவர் கைவிட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

ஏனெனில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா காட்டும் கெடுபிடிகள்தான் இதற்கு காரணம். இப்படி ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்தை படம் எடுக்க பல கோடிகள் சம்பளம் கேட்பதுடன், சண்முகபாண்டியன் படத்தை இயக்கவும் சம்மதிக்க சொல்கிறார். மேலும் படத்தை நான் பார்த்து முடிவு செய்த பிறகுதான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் நெருக்கடி தருகிறார். இதனால் ஊமை விழிகள் 2 திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டார் ஆபாவாணன் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக புதிய முகங்களை வைத்து ஒரு படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

- Advertisement -

சற்று முன்