- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களை ஒன்றும் முட்டாள் என்று நினைக்காதீர்கள்... லியோ தயாரிப்பாளரை சாடிய சவுக்கு சங்கர்... இசை வெளியீட்டு...

எங்களை ஒன்றும் முட்டாள் என்று நினைக்காதீர்கள்… லியோ தயாரிப்பாளரை சாடிய சவுக்கு சங்கர்… இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கு உண்மை காரணம் இதுதானா?…

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ்தான்.

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, விக்ரம் என்னும் மாபெரும் ஹிட்டை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். அதில் இடம்பெற்ற எல்சி யூ கான்செப்ட் இதிலும் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் நிலையில், இசை வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

முதலில் மலேசியாவில் நடத்த தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டிருந்தார். பிறகு, தமிழ்நாட்டிலேயே சென்னையை தவிர திருச்சி மதுரை கோவையில் ஏதாவது ஒரு இடத்தில் நிகழ்ச்சியை நடத்த படக்குழு முடிவு செய்தது. பிறகு அதுவும் வேண்டாம் என வரும் 30ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை நடத்த முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில், லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சென்னை செங்கல்பட்டு வட ஆற்காடு தெற்கு ஆற்காடு பகுதிகளில் விநியோக உரிமையை கேட்டு மிரட்டுவதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்த தயாரிப்பாளர் லலித் குமார், சவுக்கு சங்கர் கூறியது வதந்தி என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

இப்படி இருக்க, யாருமே எதிர்பாராத நேரத்தில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் அதிகப்படியான பாஸ் கோரிக்கைகள் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னால் எந்த ஒரு அரசியல் காரணம் இல்லை என்றும் கூறி இருக்கிறது. இந்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள விஜய் ரசிகர்கள், விஜய் பேச்சை கேட்க முடியாதா என்று குமுறி வருகின்றனர்.

மேலும் இசை வெளியீட்டு விழாவில் நடத்தியே தீர வேண்டும் என்று இணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் பதிவை மேற்கோள் காட்டி இருக்கும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தான் கூறியது வெளிப்படையானது. எங்களை ஒன்றும் முட்டாள் என்று நினைக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேசமயம் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு, போலி பாஸ்கள் உலவியதே காரணம் எனக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியை காண சிலர் இந்த செயலில் இறங்கியதாகவும், போலி பாஸ்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டது இணையத்தின் மூலம் தெரிய வந்ததால் இந்த முடிவை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால் ரசிகர்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். அதேபோன்ற சம்பவம் இதில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இசை வெளியீட்டு விழாவை லலித் குமார் ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்