- Advertisement -
Homeபொழுதுபோக்குபயப்படவும் இல்ல... பதுங்கவும் இல்ல.. லியோ ஆடியோ லான்ச் ரத்தான சூழலில் விஜய் போட்ட ட்வீட்...

பயப்படவும் இல்ல… பதுங்கவும் இல்ல.. லியோ ஆடியோ லான்ச் ரத்தான சூழலில் விஜய் போட்ட ட்வீட் ட்ரெண்டிங்

- Advertisement -

வாரிசு படத்துக்கு பிறகு லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். இந்தப் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. சூழல் இப்படி இருக்க லியோ ஆடியோ லான்ச் செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கான பாஸ்கள் வழங்கப்பட்டுவிட்டதாக கூறி புகைப்படங்கள் சில வெளியாகின.மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கும்படியான புகைப்படங்கள் நேற்று ட்விட்டரில் வெளியாகின. அதனை பார்த்த ரசிகர்கள் இது லியோ ஆடியோ லான்ச்சுக்கான பணி என்று கூறினார். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும்படியான அறிவிப்பு ஒன்று நேற்று இரவு வெளியானது.

படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை” என குறிப்பிட்டிருந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உச்சக்கட்ட ஷாக்காக்கியிருக்கிறது. மேலும் இதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கும் என பல யூகங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி விஜய்யின் சமீபத்திய மூவ்கள் அனைத்துமே அரசியலை நோக்கியதாக இருக்கிறது. எதிர்கால அரசியலின் தொடக்கத்துக்கு கண்டிப்பாக இந்த லியோ ஆடியோ லான்ச் ஆடியோ மேடையை பயன்படுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் இதை சிலர் விரும்பவில்லை. எனவே அவர்களின் ஏற்பாட்டின்பேரில் இந்த முட்டுக்கட்டை விழுந்திருக்கிறது என்று கூறினர். மேலும் இதற்கு பின்னால் கண்டிப்பாக அரசியல் அழுத்தம்தான் இருக்கிறது எனவும் சிலர் பேசுகின்றனர்.

இப்படி நிலைமை இருக்க விஜய் போட்ட பழைய ட்வீட் ஒன்றை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர். அதாவது, கடந்த 2014ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர், தலைவா நம்ம பயந்து ஒதுங்குறோமா, இல்ல பாய பதுங்குறோமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த விஜய், பயமும் இல்லை, பதுங்கவும் இல்லை, அனுபவம் தேடுறோம் அவ்வளவுதான் என கூலாக ரிப்ளை செய்துள்ளார்.இந்த ட்வீட்தான் தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

சற்று முன்