- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர்களை கதற விடும் இசைஞானி மகன் - ஆண்டுக்கணக்கில் காத்திருந்து நொந்துபோன இறைவன்

தயாரிப்பாளர்களை கதற விடும் இசைஞானி மகன் – ஆண்டுக்கணக்கில் காத்திருந்து நொந்துபோன இறைவன்

- Advertisement -

தமிழ் சினிமாவில், டைமிங் மிக முக்கியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் பணப்புழக்கம் உள்ள இந்த துறையில், பல தயாரிப்பாளர்கள், வட்டி அடிப்படையில் வாங்கி, பல கோடிகளை சினிமா தயாரிப்பில் முதலீடு செய்கின்றனர். படம் வெற்றி பெற்றால் மட்டுமே, அதற்கான லாபத்தை தயாரிப்பாளர்கள் பெற முடியும் என்பதுதான் உண்மையான நிலை.

அடுத்தடுத்த, படம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடந்தால் மட்டுமே, உரிய கால அவகாசத்துக்குள் படம் முடிக்கப்பட்டு, தியடே்டர்களில் ரசிகர்களின் பார்வைக்கு வரும். தாமதிக்கும் பட்சத்தில், தயாரிப்பாளருக்கு பல விதங்களில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இறைவன் படம், கடந்த ஓராண்டுக்கு முன்பே வெளிவர வேண்டியது. ஆனால், இந்த ஓராண்டு தாமதத்துக்கு மிக முக்கிய காரணம், இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்தான், இறைவன் படத்துக்கு பின்னணி இசை தர, ஓராண்டு இழுத்தடித்து விட்டாராம்.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்துக்கும், யுவன்சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர். அந்த படத்துக்கும் இதுபோலவே தாமதம் செய்துவிடுவாரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இறைவன் படம் மட்டுமின்றி, பல தயாரிப்பாளர்களும் யுவன்சங்கர் ராஜாவின் தாமதத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்டஸ்ட்ரியில் டாக் வந்துள்ளது.

விஜய் படத்தை இயக்குவது, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு என்பதால், யுவன்சங்கர் ராஜாவின் சகோதரர் என்பதால், அவருக்கு இப்படி தாமதம் செய்ய மாட்டார். மேலும், இது விஜய் படம். சகோதர பாசத்தில் பணியை செவ்வனே உரிய காலத்தில் முடித்து தந்து விடுவார் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஆனால் ஒரு வருஷம் காத்திருந்து, இறைவன் படத்துக்கு பின்னணி இசை வாங்கியும் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது. நிச்சயம் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என கூறப்பட்ட நிலையில், படத்துக்கு கிடைத்த ஏ சான்றிதழும், படத்தின் நாயகனே, குழந்தைகளை இந்த படத்துக்கு அழைச்சிட்டு வராதீங்க என முன் எச்சரிக்கையும் செய்த நிலையில், இறைவன் படம் தியேட்டர்களில் காற்று வாங்குகிறது.

சற்று முன்