- Advertisement -
Homeபொழுதுபோக்கு170வது படத்துக்காக திருவனந்தபுரம் வந்திறங்கிய சூப்பர் ஸ்டார்... இன்னொரு சூப்பர் ஸ்டார் இருப்பதையும் உறுதிப்படுத்திய படக்குழு......

170வது படத்துக்காக திருவனந்தபுரம் வந்திறங்கிய சூப்பர் ஸ்டார்… இன்னொரு சூப்பர் ஸ்டார் இருப்பதையும் உறுதிப்படுத்திய படக்குழு… அப்புறம் என்ன போடுங்கப்பா வெடிய…

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதால் உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டர் நடித்த இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது ஜெயிலர் திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த். ஏற்கனவே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் தனக்கான போர்ஷன்களை ரஜினிகாந்த் முடித்து இருக்கிறார். பொங்கலன்று இந்த திரைப்படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேலுடன் ஒரு திரைப்படம், லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் என சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் வரிசை கட்டி இருக்கின்றன. இதில் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு முன்னதாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஆர்வம் காட்டி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், என்கவுண்டர் மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. இதில் ஓய்வு பெற்ற அதிகாரியாக ரஜினி நடிக்கிறாராம். படத்தில் நடிக்கும் மற்ற பிரபலங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகைகள் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் ஆகியோர் இதில் உள்ளனர்.

இதேபோல் தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பகத் பாசிலும் இதில் இருக்கின்றனர். இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் அமிதாப்பச்சனும், ரஜினி படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக மஞ்சு வாரியரும், மகளாக ரித்திகா சிங்கும் நடிக்கிறார்களாம்.

மகனாக பகத் பாசிலும், அவரது மனைவியாக துஷாரா விஜய்யினும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதே போல் வில்லனாக ராணா நடிக்கிறாராம். கன்னியாகுமரி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு இது எடுக்கப்படுகிறது. இதில் குமரி வட்டார வழக்கு மொழியில் ரஜினி பேசுகிறாராம். திருவனந்தபுரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்று இருக்கிறார். இதைத் தொடர்ந்து நாளை படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்