நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 3 படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி எந்திரன் மற்றும் 2.0 ஆகிய 3 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. இதில் 2.0 படத்துக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. இனிமேலும் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
அதற்கான காரணங்கள் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ரஜினி நடித்த 2.0 படப்பிடிப்பில் அவருக்கு பல அவமானங்கள் நடந்தன. அதனால்தான் ரஜினிகாந்த் இனி ஷங்கருடன் இணைந்து படம் பண்ணக் கூடாது என்ற தீர்மானமான ஒரு முடிவில் இருக்கிறார்.
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஷங்கரிடம், நீங்கள் யாருடைய பயோபிக் எடுக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்ட போது, உடனே ரஜினிகாந்த் பயோபிக் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். ஆனால் ஷங்கருக்கு அப்படி ஒரு விருப்பம் உண்மையிலேயே இருந்தாலும் அதற்கு நிச்சயமாக ரஜினிகாந்த் சம்மதிக்க மாட்டார்.
அந்த அளவுக்கு 2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அவமானங்களை சந்தித்து இருக்கிறார். எப்போதுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு செல்பவர் ரஜினிகாந்த். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவர் அரைநாள் கூட தாமதமாக ஷூட்டிங் சென்றாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால் அவர் அப்படி செய்ய மாட்டார். சரியான நேரத்துக்கு ஷூட்டிங் சென்று விடுவார். ஆனால் 2.0 படம் ஷூட்டிங்கின் போது ஒருநாள் தவிர்க்க முடியாமல் 30 நிமிடம் லேட் ஆகி விட்டது. 7 மணிக்கு செல்ல வேண்டியவர் 7.30 மணிக்கு சென்றார். ஆனாலும் பள்ளி மாணவன் போல, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் ஓடிச் சென்று இருக்கிறார்.
மேக்கப் அறைக்குள் சென்று அவசர அவசரமாக மேக்கப் போட்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த அந்த படத்தின் புரடக்சன் எக்ஸிடியூவ் பப்பு என்பவர் ரஜினியை பார்த்து, என்ன இப்படி லேட்டா லேட்டா வர்றீங்க, ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டேங்கறீங்க என கடுகடு என கோபமாக கேட்டிருக்கிறார்.
இவர் இயக்குனர் ஷங்கரின் சொந்த அக்கா மகன். இதனால் ரஜினி அப்செட் ஆகியிருக்கிறார். பிறகு வேகமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஓடிச் சென்றதில் தடுக்கி விழுந்து காலில் ரத்தம் வழிந்திருக்கிறது, அப்படியே போய் கேமரா முன்பு நின்றிருக்கிறார். அதை பார்த்து ஷங்கர் ஷூட்டிங்கை கேன்சல் செய்து, ரஜினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்,.





