- Advertisement -
Homeபொழுதுபோக்குகுடும்பத்துடன் தனது படம் பார்க்க வரும் ரசிகர்களை மொத்தமாக மறந்த தளபதி - அண்ணா, என்ன...

குடும்பத்துடன் தனது படம் பார்க்க வரும் ரசிகர்களை மொத்தமாக மறந்த தளபதி – அண்ணா, என்ன விஜய் அண்ணா இப்படி பேசீட்டீங்க

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என ஒரு குணம் உண்டு. அது, சினிமாவில் வரும் ஹீரோக்களை ஒரு கட்டத்துக்கு பிறகு, படத்தின் நாயகனாக மட்டுமே பார்க்க மாட்டார்கள். தங்கள் பக்கத்துக்கு வீட்டு பையனாக, எதிர் வீட்டில் வசிப்பவராக, சிலர், தங்கள் குடும்பத்தில் ஒருவராக கூட நினைக்கும் அளவுக்கு அவர்களுக்கு தாராளமான மனம் உண்டு. அதனால்தான், அவர்களை, அவர்கள் நடித்த படங்களை கொண்டாடி மகிழ்ச்சி அடைகின்றனர்.

73 வயதாகியும் இன்னும் ரஜினியை பலரும் கொண்டாட அதுதான் காரணம். அவரது வயது கடந்தும், அவரை பலரும் நேசிக்க காரணம் ஒரு நடிகராக மட்டுமின்றி சக மனிதராக, வெற்றியாளராக, ஒரு சகோதரராக பார்க்கும் மனநிலை பலருக்கும் இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்து போய்விட காரணம், நம் வீட்டு பிள்ளை போலவே இருக்கிறாரே என்ற தோற்றமும், அவரது கலகலப்பான பேச்சும்தான்.

- Advertisement -

அப்படிதான், பூவே உனக்காக படத்தில் நடித்த போது, விஜய் ரசிகர்களாக பலரும் மாறினர். அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்காக பலரும் வருந்தினர். விஜயை நடிகன் என்ற நிலையை கடந்து அவரிடம் அன்பு காட்ட துவங்கினர், எம்ஜிஆருக்கு, ரஜினிக்கு கிடைத்த அதே அன்பு, இன்று விஜய்க்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த சூழலில், லியோ டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதில் விஜய் ஒரு காட்சியில் பேசி இருக்கும் வசனம், பெண்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. குடும்பத்துடன் விஜய் டிரெய்லரை பார்த்த பலரும், இந்த கண நேரத்தில், தங்களுக்குள் பெரிய அவமானமாகவே அதை உணர்ந்திருக்கின்றனர், பெண்கள், குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் குடும்பம், குடும்பமாக விஜய் படத்தை பார்க்க ஆர்வம் காட்டும் நிலையில், தன் பெண் ரசிகைகளை மறந்து, இந்த வசனத்தை பேசி இருக்கிறார் விஜய்.

- Advertisement -

அப்படிப்பட்ட ஒரு வசனத்தை படத்தில் பேச வேண்டிய அவசியம் கிடையாது. அந்த வசனத்தை பேசி தான், அந்த படத்தை புரிய வைக்க வேண்டிய எந்த கட்டாயமும் கிடையாது. என்னை போலவே இருக்கும் அந்த…. பையன் என்ற வார்த்தையால், படத்தின் காட்சியின் படி அது விஜயை தான் அவர் சொல்கிறோரோ என்பது, மிக அபத்தமாக இருக்கிறது. விஜய் வாயில் இருந்து, இந்த வார்த்தைகளை பெண் ரசிகைகள் நினைத்து கூட பார்க்கவில்லை.

படத்தின் வசனம் எழுதிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் பற்றி, அவருக்கான ரசிகர்கள் பற்றி அறியாதவர் அல்ல. விஜய் இதுபோன்ற வசனத்தை பேசினால், பெண் ரசிகைகள் அதை ஏற்றுக்கொள்வார்களா என அவர் யோசிக்காதது மிகப்பெரிய தவறு. இந்த வசனம் பேசி, ஒரு ஹீரோ தன்னை அசிங்கப்படுத்திக்கொள்ள அவரே காரணமாக இருந்திருப்பது இன்னும் மோசமானதாக இருக்கிறது. டிரெய்லரில் வந்ததோடு சரி, படத்தில் அந்த வசனம் இல்லாமல் தவிர்க்க, இனியாவது விஜய் விழித்துக்கொள்வார் என நம்புவோம்.

- Advertisement -

சற்று முன்