- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியை தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட லதா ரஜினிகாந்த் - அவர்கள் இழந்த...

ரஜினியை தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட லதா ரஜினிகாந்த் – அவர்கள் இழந்த உறவுகளை திருப்பி தர முடியுமா என்றும் கேள்வி!

- Advertisement -

நேற்று முன்தினம் கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த துயர சம்பவம் குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இது நடந்த ஒரு மணி நேரத்துக்குள் நடிகர் ரஜினிகாந்த் ஒரு இரங்கல் தகவலை வெளியிட்டு இருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆர்வம் காட்டாத நடிகர் ரஜினிகாந்த், அரசியல் சார்ந்த நிருபர்களின் கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என்று வேகமாக சொல்லி விடுவார். ஆனால் கரூரில் நடந்த சம்பவத்துக்கு மட்டும் உடனடியாக ரியாக்சன் செய்தது பலரிடையே விமர்சனம் எழுந்தது.
இப்போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் கரூர் சம்பவம் குறித்த ஒரு வீடியோ பதிவை செய்திருக்கிறார்.

- Advertisement -

அதில் லதா ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, கரூரில் நடந்த சம்பவத்தை நினைத்து இதுவரைக்கும் எனக்கு மனசு பதறிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் நான் அன்றாடம் சந்தித்து மகிழும் தெய்வங்கள். இதுபோன்ற கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்வதை பெரியவர்கள் பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எப்படி கூட்டம் இருக்கு, எந்த பக்கம் நகருவாங்க, என்ன பாதுகாப்பு முறைகள் செய்யப்பட்டு இருக்கு என்பது எதுவும் தெரியாமல் அந்த குழந்தைகள் நம்மை நம்பி கூட வந்துடுவாங்க. அப்படி அவர்களை அங்கு கூட்டிக்கொண்டு போன பிறகு அவ்வளவு கூட்டத்தில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது. ஏனென்றால் அந்த நிமிடம் நமது கண்ட்ரோலில் இருக்காது.

- Advertisement -

கூட்ட நெரிசல் என்பதே எல்லோரையும் மீறி நடக்கிற ஒரு விஷயம். இந்த கூட்டத்தில் எப்படி இப்படி நடந்தது, இதை எப்படி தவிர்த்திருக்கலாம், என்னென்ன பாதுகாப்பு செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கேள்விகள் இருக்கிறது. என்ன இருந்தாலும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு யாராலும் எந்த ஈடும் கொடுக்க முடியாது. பதில் சொல்லவும் முடியாது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறந்து போன அவர்களது உறவுகளை திருப்பிக் கொடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை. இந்த மாதிரி விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் நாம் எல்லோரும் விழிப்புணர்வோடு நடந்துக்கணும். எப்போதும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடக் கூடாது. குழந்தைகள் பெண்களால் கடைசி நிமிடத்தில் ஓட முடியாது. இனி எல்லோருமே இணைந்து இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்