- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ திரைப்படத்தின் கதை இதுதானா... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்...

லியோ திரைப்படத்தின் கதை இதுதானா… இணையத்தில் தீயாய் பரவும் தகவல்…

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றியிருக்கும் திரைப்படம் லியோ. செவன் ஸ்டார் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

பிப்ரவரி மாதமே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் டைட்டில் கருடனாக தான் இருக்கும் என பலரும் எதிர்பார்க்க, சஸ்பென்ஸை தக்கவைத்த லோகேஷ் கனகராஜ் டீம், லியோ என்ற டைட்டிலை அறிவித்தது. இதன் பிறகு காஷ்மீர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதற்கான சூட்டிங் நடைபெற்றது.

- Advertisement -

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நா ரெடி தான் பாடல் வெளியான நிலையில், அடுத்ததாக இரண்டு பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்தன. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீரில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழும் பார்த்தி என்னும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும், மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் மகனாகவும் நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் வருகிறார். ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்தும், ஹரால்டு தாஸாக அர்ஜுனன் நடித்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை, பலருக்கும் முகம் சுளிக்கும்படியாக இருந்த நிலையில் தற்போது அதனை படக்குழு மியூட் செய்திருக்கிறது.

- Advertisement -

படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், முதல் நாளில் மட்டும் இரண்டு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதிகாலை நான்கு மணி மற்றும் காலை 7:00 மணிக்கு லியோ திரையிடப்படுகிறது. இதை எடுத்து இருபதாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை லியோ ஐந்து காட்சிகளாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் லியோனி வருமா இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் லியோ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது லியோ திரைப்படம் விக்ரம் திரைப்படத்திற்கு முன்னால் நடக்கும் கதை தானாம். கைதி திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜோய் ஆக வரும் நரேனின் மகள், அதாவது பிக் பாஸ் ஜனனி காஷ்மீரில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கிறாராம். கைதி திரைப்படத்தில் இருந்த அடைக்கலம், அன்பு, நெப்போலியன் கதாபாத்திரங்களும் லியோவில் இருக்கிறார்களாம். படத்தில் லியோவாக விஜய் வருவது கைதிக்கு எல்லாம் முன்னால் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவ அதை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்