- Advertisement -
Homeபொழுதுபோக்குஅசுரன் பட வசனத்தை அசத்தலாக பேசிய விஜய், கரகோஷத்தால் அரங்கத்தையே அதிரவைத்த மாணவர்கள்

அசுரன் பட வசனத்தை அசத்தலாக பேசிய விஜய், கரகோஷத்தால் அரங்கத்தையே அதிரவைத்த மாணவர்கள்

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வருகிற 17 ஆம் தேதி விஜய் கல்வித்தொகை மற்றும் சான்றிதழ்களை அளித்து கௌரவிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜய்யின் அரசியல் நுழைவிற்கான தொடக்கம் இது என்று பலராலும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த அறிவிப்பின்படி இன்று, விஜய் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் முன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவியர்களுக்கு கல்வித்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் வழங்கி கௌரவித்தார். இந்த விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

இதில் விஜய், மாணவ/மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பல  அறிவுரைகளை கூறினார். அவர் பேசத்தொடங்கியபோதே, “அறிவுரைகள் எல்லாம் உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும். எனக்கு பிடித்த சில விஷயங்களை நான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள்” என்று கூறினார்.

அதன் பின் பல விஷயங்களை பேசிய விஜய், “சமீபத்தில் வந்த படத்தில் ஒரு வசனத்தை நான் கேட்டேன். காடு இருந்தால் எடுத்துக்கிடுவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க, ஆனால் படிப்பை மட்டும் உன் கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது என்று ஒரு வசனம். அது என்னை மிகவும் பாதித்த ஒரு வசனமாக இருந்தது. இது நூற்றுக்கு நூறு உண்மை மட்டுமல்ல இது யதார்த்தமும் கூட” என்று அசுரன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசினார். அப்போது மாணவ/மாணவியர்கள் மிகவும் உற்சாகத்தோடு கரகோஷங்களை எழுப்பினார்கள்.

சற்று முன்