- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளியானது விஜய் 68 படத்தின் பூஜை வீடியோ - இந்த படத்தில் விஜய் பேச்சை மீறி...

வெளியானது விஜய் 68 படத்தின் பூஜை வீடியோ – இந்த படத்தில் விஜய் பேச்சை மீறி இவரும் நடிக்கிறாரா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படம், கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆனது. படம் வெளியானதில் இருந்து நான்கு நாட்களில் 404 கோடி ரூபாயை, லியோ வசூலித்துள்ளது. படம் சுமார்தான் என்ற விமர்சனமே மேலோங்கிய நிலையிலும், வசூலில் லியோ சாதனை படைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

லியோ படத்தின் பாதி வரை, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் படத்தை வரவேற்கவே செய்கின்றனர். அதுவரை லியோ படம் பற்றி குறையே கூறாத அளவுக்கு சிறப்பாக படம், திரைக்கதை உள்ளது. ஆனால், இடைவேளைக்கு பிறகு, லியோ வேறுமாதிரியான படமாக மாறிவிடுகிறது.

- Advertisement -

விக்ரம் போன்ற படமாக இருக்கும் என எதிர்பார்த்த, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே தருகிறது. கைதி படம் போல திரில் படமாக இருக்கும் என எதிர்பார்த்தால் அதிலும் பலத்த தோல்வியே ரசிகர்களுக்கு கிடைக்கிறது. சஞ்சய் தத், அர்ஜூன் போன்ற நடிகர்களை லோகேஷ் கனகராஜ் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது படத்தில் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், விஜய் நடித்து வரும் விஜய் 68 படத்தின் அப்டேட் இன்று கிடைத்துள்ளது. அதாவது, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா, இம்மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ஆனால், இந்த நிகழ்வு குறித்த எந்த புகைப்படமும், வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில், இன்று அந்த நிகழ்வின் வீடியோவை, படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட் மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் விஜயுடன் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில், வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜியை, நீ இந்த படத்தில் நடிக்க வேண்டாம். நீ அஜீத் ரசிகர் என எல்லோருக்கும் தெரியும், என பிரேம்ஜியிடம் விஜய் கண்டிப்பாக கூறியதாகவும், பிரேம்ஜி அவரிடம் நானும் நடிக்கிறேன் என அடம்பிடித்ததாகவும், பேட்டி ஒன்றில் வெங்கட்பிரபும், பிரேம்ஜியும் கூறியிருந்தனர். இந்நிலையில் படபூஜை விழாவில் பிரேம்ஜியும் இருப்பதால், அவரும் இந்த படத்தில் நடிக்க விஜய் சம்மதித்து விட்டார் என கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்