- Advertisement -
Homeபொழுதுபோக்கு45 ஆண்டுகளாக தேடியும் கிடைக்காத விரக்தியில் நடிகர் விக்னேஷ், விரைவில் திரையில் என் விஸ்வரூபம் தெரியும்...

45 ஆண்டுகளாக தேடியும் கிடைக்காத விரக்தியில் நடிகர் விக்னேஷ், விரைவில் திரையில் என் விஸ்வரூபம் தெரியும் என்கிறார் – ஒண்ணுமே புரியலையே ப்ரோ

- Advertisement -

நடிகர் விக்னேஷ். கடந்த 1980, 90களில், தமிழ் சினிமாவில் முக்கிய இளம் நடிகராக இருந்தவர். சின்னத்தாயி படத்தில் அறிமுகமான விக்னேஷ். கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி பாடல் காட்சியில் பிரமாதமாக ஆடிப்பாடி அசத்தி இருப்பார்.

தொடர்ந்து பாரதி ராஜா படங்களில் அவர் நடித்தார். கிழக்குச் சீமையிலேயே படத்தில் விஜயகுமார் மகனாக, அத்தையான ராதிகா மகளை காதலிப்பார். ஆத்தங்கரை மரமே, அரசமரக் கிளையே என, பாடி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அதே போல், பசும்பொன் படத்தில், தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும் சண்டையே வந்ததில்லே பாடலில் யுவராணி, விக்னேஷ் நடனம் அசத்தலாக இருந்தது.

இப்போது, அந்த பாடல்தான், லியோ படத்தில் காபி ஷாப்பில் ஒலிக்க விட்டு, சமீபத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்த பாடலை, படம் பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ் எதிர்பார்க்கவே இல்லை. ரசிகர்களின் உற்சாகம் பார்த்து, அசந்து போயிருக்கிறார். லியோ படத்தில் விக்னேஷ் நடிக்காமலேயே பலரும், அவருக்கு போனில் அழைத்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ஒரு நேர்காணலில் நடிகர் விக்னேஷ் கூறியதாவது, சினிமாவில் ஆரம்பத்தில் கிராமத்துக் கதைகளில் அதிகமாக நடித்ததால், ராமராஜன் போலவே எனக்கும் கிராமத்து கதைகளிலேயே அதிகமாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. சின்னத்தாயி, கிழக்குச் சீமையிலே, பசும்பொன், செல்லக்கண்ணு, ராமன் அப்துல்லா என பல படங்கள் எனக்கு பெரிய வெற்றியை தந்தன. குறிப்பாக என் படங்களில், பாடல்கள் எனக்கு பெருமை சேர்த்தன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூலனூர்தான், எனது ஊர். தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன். ஆனால், அவர்கள் அருகில் உள்ள ஈரோடுக்கு கூட போகாத அளவுக்கு மிகவும் கிராமத்து பாமர மக்கள். பஸ்சில் கூட பயணிக்காதவர்கள். மூன்றரை வயதிலேயே என் பெற்றோரை, நான் பிரிந்து விட்டேன். அவர்கள் இப்போது உயிரோடு, இல்லையா என்று கூட எனக்கு தெரியாது. கடந்த 45 ஆண்டுகளாக அவர்களை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

சினிமாவில், நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க எனக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. எனக்கு வழிகாட்ட அண்ணன், தம்பியோ, பெற்றோரோ என யாரும் எனக்கு இல்லை. அதனால், தவறான முடிவுகளை எடுத்து நான் அடைய வேண்டிய வெற்றிகளை இழந்து விட்டேன். பட வாய்ப்புகளும் பல ஆண்டுகளாக இல்லை. இப்போது மீண்டும் மிக சிறப்பான படத்தில், விஸ்வரூபமான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறேன். நிச்சயம் தமிழ் சினிமாவே விக்னேஷ், இதுவரை எங்கே இருந்தே, என பிரமித்து பார்க்கும் அளவுக்கு இந்த படம் இருக்கும் என்று கூறி இருக்கிறார் விக்னேஷ்.

சற்று முன்