- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா படம் தந்த மிக பிரமாண்டமான வெற்றியால் விஜய் சேதுபதிக்கு வந்த திடீர் நெருக்கடி -...

மகாராஜா படம் தந்த மிக பிரமாண்டமான வெற்றியால் விஜய் சேதுபதிக்கு வந்த திடீர் நெருக்கடி – அப்போ அலட்சியமா இருந்தவங்க எல்லாம் இப்போ உஷார் ஆயிட்டாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த டிஎஸ்பி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்திப் பறவை போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கிய இந்த படத்தை, படத்தின் ஹீரோ நடிகர் விஜய் சேதுபதியே மீண்டும் ஒருமுறை பார்ப்பது சந்தேகம்தான்.

அதே போல் டிஎஸ்பிக்கு முந்தைய படங்களான சங்கத்தமிழன், லாபம், ஜூங்கா, காத்துவாக்குல ரெண்டு காதல், நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், கருப்பன் போன்ற படங்களை ரசிகர்களை பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில், அந்த படங்கள் பலத்த ஏமாற்றத்தை தந்தன. அதுவும் கதாநாயகனாக நடித்த அவரது படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகின.

- Advertisement -

அதே நேரத்தில் வில்லனாக நடித்த பேட்ட, விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இந்தியிலும் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்து விஜய் சேதுபதி அசத்தினார். அதே நேரத்தில் விஜய் சேதுபதி வில்லனாக, கதாநாயகனாக மாறி மாறி நடித்ததால் ரசிகர்களுக்கே ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதும், இந்த பின்னடைவுக்கு காரணமானது.

ஆனால் சூரி கதாநாயகனாக நடித்த விடுதலை படத்தில், வெற்றிமாறன் விஜய் சேதுபதியை வேறலெவலில் ஒரு சிறந்த கேரக்டராக காட்டியிருந்தார். பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி வந்தாலும் அந்த காட்சிகளில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகன் சூரி என்றாலும், ரசிகர்களின் மனதில் நின்றவர் விஜய் சேதுபதியும், அவரது கேரக்டரும்தான்.

- Advertisement -

இந்த சூழலில், தொடர்ந்து பிளாப் படங்களை தந்த விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் மகாராஜா, மிகப்பெரிய வரவேற்பை, கொண்டாட்டத்தை பெற்றுத் தந்திருக்கிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படம், நேற்று அமொிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 4 நாள் திரைப்பட விழாவில், 4ம் நாளில் திரையிட்டு பாராட்டை பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துக்கொண்டுள்ளார்.

மகாராஜா படம் தந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக, இப்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் சூடு பிடித்துவிட்டது. ஏற்கனவே அவரை கமிட் செய்து அட்வான்ஸ் கொடுத்திருந்த முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் கால்ஷீட் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன. பிளாப் படங்களை தந்த அவரை இதுவரை கண்டுக்கொள்ளாத பல தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது, புதிய படங்களில் கமிட் செய்ய போட்டி போடுகின்றன. எனினும் முதலில் செய்த கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு, புதிய படங்களில் நடிக்க கமிட் ஆக விஜய் சேதுபதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்