இயக்குநர் அமீர், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் முக்கியமான ஒருவராக தனது சிறந்த படங்களை தந்து வருகிறார். மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களை தொடர்ந்து இப்போது மாயவலை என்ற படத்தை இயக்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, பருத்திவீரன் படத் தயாரிப்பு குறித்து பல விமர்சனங்களை, அந்த படத்தின் இயக்குரான அமீர் மீது குற்றச்சாட்டுகளாக கூறியிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு இருப்பதால், இதற்கு எவ்வித பதிலும் தர விரும்பவில்லை என, அமீரும் நேற்று விளக்கம் தந்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் பருத்திவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான மொத்த தொகையையும் நான்தான், அமீர் அண்ணனுக்கு அன்று கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை கூட எங்களுக்கு செட்டில் செய்யாமல், படம் ரிலீஸ் செய்யப்பட்டது என. அமீருக்கு ஆதரவாக தனது பதிவை செய்திருந்தார்.
அவரைத்தொடர்ந்து இன்று இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, பருத்திவீரன் படப்பிடிப்பில் 6 மாதங்களுக்கு மேல் இருந்தவன் நான். 50, 60 பேரிடம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி தான், இந்த படத்தை அமீர் எடுத்தார். அவர் மீது பழி சுமத்தினால், நான் பேச வேண்டியது வரும் என்ற வகையில், ஞானவேல்ராஜாவுக்கு பதில் தந்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் அமீர், நடிகர் சித்ராலட்சுமன் சந்தித்த ஒரு நேர்காணலில் இயக்குநர் அமீர் கூறியதாவது, கடந்த 17 ஆண்டுகளாக நான் யாரிடமும் சொல்லாத ஒரு விஷயம் இது. இப்போது சொல்லலாம் என நினைக்கிறேன். நான் பருத்திவீரன் படம் எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. என் மனைவிக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். எந்த நடிகரையும் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது கிடையாது. சின்ன பெண்தான் அவர். அந்த ஹீரோ, இந்த ஹீரோவை பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதே கிடையாது.
ஆனால் ஒருமுறை, என்னிடம் நடிகர் சிவக்குமார் சாரை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினார். சரி, பருத்திவீரன் படம் முடியட்டும், கூட்டீட்டு போகிறேன் என்று சொன்னேன். ஆனால் படத்தை முடித்த பிறகு, என்ன நடந்தது என உங்களுக்கே தெரியும். அவரை நான் கடைசி வரை சிவக்குமார் சாரிடம் நான் கூட்டீட்டு போகவில்லை. இப்படி என் மனைவி சொன்னதாக, அவரிடமும் எப்போதும் சொன்னதில்லை.இவரிடமும் அதுபற்றி பிறகு பேசவில்லை என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அமீர்.





