தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளியானது. மிகவும் அதிரடியாகவும் ரணகளமாகவும் அந்த டீசர் தென்பட்டது. படத்தில் எங்கு திரும்பினாலும் வித விதமான துப்பாக்கிச் சத்தங்களாகவே கேட்டுக்கொண்டிருந்தது. டீசரே இவ்வளவு வெறித்தனமாக இருக்கும்போது திரைப்படம் மிகவும் தாறுமாறாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இத்திரைப்படத்தில் தனுஷின் கெட்டப் வேற லெவலில் இருக்கிறது. நிச்சயம் இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிசான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவருகிறது.

இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்திற்கு வந்த சிக்கல், தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கும் வந்துள்ளது. அதாவது “இந்தியன் 2” திரைப்படத்தின் மொத்த Footage 6 மணி நேரம் வந்ததால் அதனை “இந்தியன் 3” ஆக வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதே போல் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Footage ஐந்தரை மணி நேரங்கள் வருகிறதாம். இதனால் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக அதனை வெளியிட்டு விடலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றதாம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.





