தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் 1 அயலான் இந்தியன் 2 ஸ்பைடர் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். மேலும் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். துருவா சர்ரைனோடு நன்னாகு பிரேமதோ போன்ற தெலுங்கு படங்களிலும் இந்தியிலும் பல படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.
இப்போது இந்தியில் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இராமாயணா. இந்த படத்தில் இராமராக ரன்வீர் கபூர் சீதா தேவியாக சாய்பல்லவி இராவணன் கேரக்டரில் யஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இராமாயணா படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் 1800 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது. இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிற தீபாவளிக்கு முதல் பாகமும் அடுத்த 2027ம் ஆண்டில் தீபாவளிக்கு 2ம் பாகமாகவும் வெளிவர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் கவனம் பெற்றது.
இதில் ராமராக ரன்வீர் கபூர் சீதையாக சாய்பல்லவி இராவணனாக யஷ் ஆகியோர் நடித்துள்ள நிலையில் சூர்ப்பனகை கேரக்டரில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. மிகவும் கொடூரமான குணம் கொண்ட அந்த கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு தனது எக்ஸ் பதிவு ஒன்றில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதில் கூறியிருப்பதாவது, உங்களது அழகிய கடிதம் கிடைத்தது. சூர்ப்பனகை கேரக்டரில் நடிக்க நான் சம்மதம் சொன்னதற்கு முக்கிய காரணம் அந்த கேரக்டரின் ஆழம்தான். வரலாறு அவரை ஒரே ஒரு சம்பவத்துக்காக மட்டுமே ஞாபகம் வைத்திருக்கிறது.
ஆனால் அவரது கதைக்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.ஒரு நடிகையாக மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை உத்வேகத்தை தருகிறது. இராமாயணா படம் வெளியாகும் போது சூர்ப்பனகை கேரக்டரின் கதையை அவரை மக்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





