- Advertisement -
இப்போது தியேட்டர்கள் வசூலை காட்டிலும் ஓடிடி நிறுவனங்கள் தான் பெரிய லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு தருகிறது. ஆனால் இப்போது முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. அதாவது ஆண்டுக்கு 2 அல்லது 3 பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களை மட்டுமே வாங்குவது, அதே நேரத்தில் சின்ன பட்ஜெட்டில் உருவான படங்களை அதிகளவில் வாங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளன. இதனால் 5 கோடி ரூபாய்க்கு வாங்கும் சின்ன பட்ஜெட் படம், 2 மடங்கு 3 மடங்கு என அதிக லாபம் தருவதால் சின்ன பட்ஜெட் ஹிட் படங்களுக்கு முக்கியத்துவம் தர ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதால், பெரிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.





