- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டர் ஷேர் 5 கோடி ரூபாய் கெடைச்சாலே அது பெரிய விஷயம்தான், தலையில் துண்டுப்போட்ட தயாரிப்பாளர்...

தியேட்டர் ஷேர் 5 கோடி ரூபாய் கெடைச்சாலே அது பெரிய விஷயம்தான், தலையில் துண்டுப்போட்ட தயாரிப்பாளர் – வெச்சு செஞ்ச விஜய் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரராக இருப்பவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் இப்போது அவர் நின்றால், நடந்தால், பேசினால், கையை ஆட்டினால், விரலை சொடக்கினால் அது ஸ்டைல்தான். அது மாஸ்தான்.

அப்படிபட்ட ரஜினிகாந்திடமே மோதி பார்க்க துணிந்தவர்கள் விஜய் ரசிகர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் விஜயே, சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான் என வெளிப்படையாக சொல்லி விட்டார். அரசியலுக்கு வரும் நேரத்தில் எதற்கு ரஜினி ரசிகர்களிடம் வீண்வம்பு என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

- Advertisement -

இந்த நிலையில் ஜப்பான் படத்தில், விஜயை கிண்டலடிப்பது போன்று கார்த்தி பாடிய ஒரு பாடலுக்கு, இந்த பாடலை பாடியவர் கோல்டன் ஸ்டார் கார்த்தி என்று, திரையில் வரச் செய்து, விஜய் ரசிகர்களை கடுப்பேற்றி விட்டனர். ஏனெனில், விஜய் ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்த போது அதில் பாடினால், இதுபோல் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று குறிப்பிடுவர்.

அதனால், எரிச்சலடைந்த விஜய் ரசிகர்கள் ஜப்பான் படத்தை, சமூகவலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி விட்டனர். ஆனால், உண்மையில் படம் செம சொதப்பல் என்பதும் உண்மைதான். படம் பார்க்க சென்ற பலபேர், தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இடைவேளையில் எழுந்து வெளியேறி சென்றுவிடுகின்றனர்.

- Advertisement -

இதில் மிகவும் நொந்து போயிருப்பது அந்த படத்தின் தயாரிப்பாளர்கள். படம் ரிலீஸ் ஆன பின்பு, சாட்டிலைட் சேனலில் விற்றால் நிறைய லாபம் கிடைக்கும் என தப்புக்கணக்கு போட்டு விட்டார். ஜப்பான் படத்தை வாங்க, எந்த சாட்டிலைட் சேனலும் முன்வரவில்லை. அதனால், 15 கோடி வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தியேட்டர்களில் ஷேர் என்ற வகையில் ரூ. 20 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், ரூ. 5 கோடி கிடைத்தாலே அது பெரிய விஷயம் என்ற நிலையே இப்போது வரை நீடிக்கிறது. இதிலும் ரூ. 15 கோடி வரை நஷ்டம் என்பதால் மொத்தம் ரூ. 30 கோடி நஷ்டத்தில், தலையில் துண்டு போடும் நிலைக்கு தயாரிப்பாளர் வந்துள்ளதாக விஜய் ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்