- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயின் திடீர் மாற்றம்… - ஏதேனும் அச்சுறுத்தல் காரணமா? குழப்பத்தில் ஜனநாயகன்...

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயின் திடீர் மாற்றம்… – ஏதேனும் அச்சுறுத்தல் காரணமா? குழப்பத்தில் ஜனநாயகன் படக்குழுவினர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது கடைசி படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையைமக்கிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்துக்கு பிறகு 2வது முறையாக நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஜனநாயகன் படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் பாபி தியோல் பிரியாமணி நரேன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜனநாயகன் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. நடிகர் விஜய் நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகள் சில, சமீபத்தில் கொடைக்கானலில் தாண்டிக்குடி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.

இந்த படத்திலும் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் போக்கிரி தெறி மற்றும் ஜில்லா படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். துப்பாக்கி படத்தில் மிலிட்டரி ஆபிசராக நடித்திருக்கிறார். வழக்கமாகவே ரஜினி விஜய் அஜீத்குமார் போன்றவர்கள் அதிகமாக போலீஸ் கேரக்டர்களில்தான் நடிக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் நடிகர் விஜயிடம் நிறைய மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் அவர் பவுன்சர்கள் புடை சூழவே காணப்படுகிறார். கேமரா முன்பு நடித்த பிறகு ஓரிடத்தில் அவர் சேரில் அமர்ந்துக்கொண்டால் அவரை சுற்றியும் வட்டமாக பவுன்சர்கள் நின்று விடுகின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் ஒருவரைத் தவிர படக்குழு சார்ந்த மற்றவர்கள் யாரையும் விஜய் பக்கத்தில் நெருங்க விட பவுன்சர்கள் அனுமதிப்பது இல்லை. இதனால் படப்பிடிப்பு தளமே ஏதோ ஒரு ராணுவ கட்டுப்பாட்டு மையத்துக்குள் இருப்பது போன்ற உணர்வில் படக்குழுவினர் பணிசெய்வதாக தகவல் எழுந்துள்ளது.

ஆனால் நடிகர் விஜய் வழக்கமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருந்தாலும் மற்றவர்களிடம் எளிதாக பேசுவார். அன்பாக பழகுவார். கலகலப்பாக தான் இருப்பார். ஆனால் இப்போது பாதுகாப்பு கவசத்துக்குள் அவர் எப்போதும் இருக்க நினைப்பதால், பவுன்சர்கள் எப்போதுமே வளையம் போல அவரை சுற்றி இருக்கின்றனர். அரசியல் தலைவரான அவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்திருக்குமோ என்ற குழப்பத்தில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர்.

சற்று முன்