- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது, போட்டாரே ஒரு போடு, நடிகர் சத்யராஜ் மகள்...

அவர்கள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது, போட்டாரே ஒரு போடு, நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, புரட்சித் தமிழச்சியாக மாறி விட்டாரா?

- Advertisement -

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இன்னும் நடித்துக்கொண்டு இருக்கும் மிக நல்ல நடிகர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழிகளிலும் நடித்திருக்கிறார். இப்போது தோழர் சேகுவாரா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சத்யராஜ் நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியானது.

சத்யராஜூக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சிபிராஜ் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவரால் சினிமாவில் அப்பாவை போல முன்னணி நடிகராக வர முடியவில்லை. என்றாலும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நியூட்ரிஷியன் ஆக இருக்கிறார். அவ்வப்போது உணவு கட்டுப்பாடுகள் குறித்து, இன்ஸ்டாகிராமில் அவரது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது, மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்கள் குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில் திவ்யா சத்யராஜ் கூறியிருப்பதாவது,தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து சொல்ல விரும்புகிறேன். என் டாக்டர் நண்பர்களிடம் இருந்து வந்த தகவல்கள்தான் இது. சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக, நோயாளிகளுக்கு தேவையில்லாத பிளட் டெஸ்ட், எம்ஆர்ஐ, சில ஸ்கேன்களை செய்ய வைக்கின்றனர். நோயாளி குணமான பிறகும் சில நாட்களுக்கு பிறகே டிஸ்சார்ஜ் செய்கின்றனர்.

- Advertisement -

தனியார் மருத்துவமனைகளுக்கு போனால் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையை விட, பணம் காலியாகி விடும் என்ற பயம்தான் நோயாளிகள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. எங்க அமைப்பு சில நோயாளிகளுக்கு நாங்கள் உதவி செய்தாலும் எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது, பிராக்டிகலாக முடியாத ஒரு விஷயம்.

நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனைகள் வைத்திருப்பவர்கள், நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்துங்கள் என்று ரிக்வெஸ்ட் வைத்து கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. புரட்சித் தமிழன் சத்யராஜ் மகள், புரட்சித் தமிழச்சியாக மாறிவிட்டாரே என்று பாராட்டும் அளவுக்கு, மிக சிறந்த பதிவாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்