- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்... நிவின் பாலி வர இருந்த கதாபாத்திரத்தில் மாஸான என்ட்ரி கொடுக்கிறார்...

கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… நிவின் பாலி வர இருந்த கதாபாத்திரத்தில் மாஸான என்ட்ரி கொடுக்கிறார்…

- Advertisement -

கடந்த ஆண்டு கார்த்திக்கு மெய்யழகன் திரைப்படம் வெளியானது. இதில் கார்த்திக்கு இணையாக அரவிந்த்சாமிக்கும் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. உறவுகளின் பாசத்தையும், அதன் எதார்த்தத்தையும் மிக அழகாக கூறி பலரது பாராட்டையும் பெற்றார் இயக்குனர் பிரேம்குமார். திரையரங்குகளிலும் அதன் பின்னர் ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த முடித்திருக்கிறார். இதன் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அந்த சமயத்தில் நல்ல விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம், ஓரளவு வசூலும் ஈட்டியது. இதன்பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் பி எஸ் மித்ரன் திட்டமிட்டார்.

- Advertisement -

இதில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். தீபாவளிக்கு இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வா வாத்தியாரே திரைப்படமும் உருவாகி இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் இதுவரை முடிந்ததாக சொல்லப்படவில்லை.

ஆக்சன் கலந்த மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களும் கார்த்திக்கு வரிசை கட்டி நிற்க, அடுத்ததாக அவர் மார்சல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த தமிழ் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே விக்ரம் பிரபுவை வைத்து டானாக்காரன் என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார்.

- Advertisement -

கடல் சார்ந்த பகுதிகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட இருக்கின்றன. இதில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக இந்த திரைப்படத்தை எடுக்க தமிழ் திட்டமிட்டு உள்ளார்.

1960களில் உள்ள காலகட்டத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நிவின் பாலிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால் சீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், நடிகர் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரம், மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம், ரசிகர்களைக் கவர்ந்த ஆதிக்கு மார்சல் திருப்புமுனையாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்