- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப் போகும் ரஜினிகாந்த்... அதனை இயக்கப் போவது இவரா......

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கப் போகும் ரஜினிகாந்த்… அதனை இயக்கப் போவது இவரா… பாவம்யா சூப்பர் ஸ்டாரு…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் எடுத்து வருகிறார். என்கவுண்டரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதில் பகத் பாஸில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். முக்கியமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

- Advertisement -

தற்போது வேட்டையன் திரைப்படத்தின் 80 சதவீத பணிகள் முடிவு பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவின் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் தனது பயணத்திலேயே மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குனரை ஒரு முறை கூறியிருந்தார். தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். லோகேஷ் ரஜினி காம்போ எப்படி இருக்கும் என்று ரசிகர்களும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். இது போக மாரி செல்வராஜூடன் ரஜினி இணைய இருப்பதாக பேசப்படுகிறது. இப்படியான சூழலில் சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளரான சாஜித் நடியாவாலாவை ரஜினிகாந்த் சந்தித்தார். அவரது தயாரிப்பில் ரஜினி நடிக்க சம்மதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். அதுவும் இந்த திரைப்படத்தை இயக்கப் போவது ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா தானாம். படத்தில் கங்குலி கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்தான் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சௌந்தர்யா படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த செய்தியால் அது உண்மைதானோ என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா எடுத்த லால் சலாம் தோல்வியடைந்த சூழலில் தற்போது தனது இரண்டாவது மகள் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்