- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இப்படி ஒரு சோகமா? - கடைசி நேரத்தில்...

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இப்படி ஒரு சோகமா? – கடைசி நேரத்தில் எதிர்பாராமல் நடந்த துயரம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மிர்ணா மேனன் யோகிபாபு வசந்த் ரவி மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் கேமியோ ரோலில் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். காவலய்யா என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னாவும் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.

- Advertisement -

இதையடுத்து ஜெயிலர் 2 படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவானது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள் இந்த 2ம் பாகத்தில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா விஜய் சேதுபதி பவன் கல்யாண் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஓராண்டுக்கு மேலாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுமையடைந்தது. இந்நிலையில் படத்தின் பேட்ச் ஒர்க் எனப்படும் சில விடுபட்ட காட்சிகள் மட்டும் சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் 4ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் உள்ள ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு ஷெட்டில் ஜெயிலர் 2 படத்தின் பேட்ச் ஒர்க் காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. அப்போது சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் படக்குழுவுடன் இணைந்து மின்தொழிலாளியாக பணிசெய்தார். அப்போது அவர் பணியில் இருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இது படக்குழுவினரை பலத்த அதிர்ச்சியில் தள்ளியது. ஆர்ட் டைரக்சன் பிரிவை சேர்ந்த அந்த தொழிலாளி 28 வயது இளைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திடீரென ஏற்பட்ட மின் விபத்தில் அந்த இளைஞர் பலியான சம்பவம் படக்குழுவினரை பலத்த சோகத்தில் தள்ளியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நேரத்தில் பேட்ச் ஒர்க் பணியின் போது ஒரு தொழிலாளி இறந்த சம்பவம் ஜெயிலர் 2 படக்குழுவினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்