- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பறிவாளன் படத்தில் நடித்திருக்க வேண்டிய ஹீரோ அவர்தான், விஷால் இல்லை - பல ஆண்டுகளுக்கு பின்...

துப்பறிவாளன் படத்தில் நடித்திருக்க வேண்டிய ஹீரோ அவர்தான், விஷால் இல்லை – பல ஆண்டுகளுக்கு பின் உருட்டுகிறாரா இயக்குனர் மிஷ்கின்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் டைரக்டர் மிஷ்கின். அவர் இயக்கிய படங்கள் வழக்கமான படங்களை விட வேற லெவலில் இருப்பதால், அவருக்கென தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியான ஒரு கவனமும் ஈர்ப்பும் இருந்து வருகிறது. அதனால் மிஷ்கின் படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டைரக்டர் மிஷ்கின் தொடர்ந்து அஞ்சாதே, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கினார். சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் தேர்வு செய்து நடிக்கவும் செய்தார். சவரக்கத்தி, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்.

தொடர்ந்து மிஷ்கினுக்கு ஏற்ற நல்ல கேரக்டர்கள் அமையும் பட்சத்தில் நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவருக்குள் ஒரு தரமான நடிகர் இருக்கிறார் என்று, அவருடன் நடித்த சக நடிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். லியோவில் படம் முழுவதும் நன்றாக இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

மிஷ்கின் இயக்கிய படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பறிவாளன். இதில் கணியன் பூங்குன்றன் என்ற டிடெக்டிவ் கேரக்டரில் நடிகர் விஷால் நடித்திருந்தார். இந்த படம் விஷாலின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க மிஷ்கின் தயாரான நிலையில், லண்டனில் சில வாரங்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஆனால் மிஷ்கின், விஷால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலும், சண்டையும் ஒரு கட்டத்தில் அந்த படத்தையே டிராப் செய்யும்படி ஆகிவிட்டது. அதன் பிறகு துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி நடிக்கிறேன் என்று விஷால் களத்தில் குதித்து இருக்கிறார். இப்போது லண்டனில் படத்திற்கான லொகேஷன் பார்க்கப்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் மிஷ்கின், துப்பறிவாளன் படத்தின் கதையை நான் எழுதிய போது, நடிகர் சரத்குமாரை மனதில் வைத்து, அவரை கதாநாயகனாக நடிக்க வைக்கும் நோக்கத்தில் தான் துப்பறிவாளன் கதையை எழுதினேன். ஆனால் அது நடக்காமல் ஒரு கட்டத்தில் விஷால் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. துப்பறிவாளன் படத்தில் விஷால் கேரக்டரில் சரத்குமார் தான் நடித்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த சினிமா ரசிகர்களிடையே பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விஷால் மீதுள்ள கடுப்பில் மிஷ்கின் உருட்டுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சற்று முன்