- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி பண்ணி மாட்டிக்காதீங்க- சரக்கு பட விழாவில் மன்சூர் அலிகானை எச்சரித்த பாக்யராஜ்

இப்படி பண்ணி மாட்டிக்காதீங்க- சரக்கு பட விழாவில் மன்சூர் அலிகானை எச்சரித்த பாக்யராஜ்

- Advertisement -

நடிகர் பாக்யராஜ், தமிழ் சினிமாவில், இந்திய அளவில் சிறந்த கதை ஆசிரியராக பாராட்டப்படுபவர். சிறந்த இயக்குநராக, நடிகராக அவர் தொட்ட சிகரங்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் பாக்யராஜ் படங்களை கொண்டாடிய காலம் இருந்தது. அந்த 7 நாட்கள், சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க சின்ன ராசா என பல படங்களை சொல்லலாம்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, பின் இயக்குநராக அவதாரம் எடுத்தவர். பாண்டியராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஆர்.பி விஸ்வம் போன்றவர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் தான். வேட்டிய மடிச்சுக்கட்டு படத்துக்கு பிறகு, இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடிப்பதில், நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே, பாக்யராஜ் நடித்து வருகிறார்.

அதே போல, ஆரம்ப காலத்தில் சினிமாவில் அடியாட்களில் ஒருவராக நடித்துக்கொண்டிருந்த மன்சூர் அலிகானை, கேப்டன் பிரபாகரன் மூலம் வில்லனாக்கி, அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். அந்த அன்பையும், நன்றியையும் எப்போதும் மறக்காமல் இருப்பவர் மன்சூர் அலிகான். சினிமாவில் நடிப்பதில் மட்டுமின்றி படங்கள் இயக்குவது, தயாரிப்பதில் மன்சூர் அலிகானுக்கு ஆர்வம் அதிகம்.

இந்நிலையில், மன்சூர் அலிகான் தயாரித்து நடிக்கும் படம், சரக்கு. இந்த படத்தில் பாக்யராஜ், பழ. கருப்பையா, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை நடந்தது. இதில், கூல் சுரேஷ் தொகுப்பாளிக்கு மாலை போட்டு, பஞ்சாயத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் பேசிய பாக்யராஜ், மன்சூர் அலிகானை பற்றி வெளிப்படையாக பேசினார். மன்சூர் அலிகான் உருவத்துக்கும், உள்ளத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர். குழந்தை மனம் கொண்டவர். அவரது அன்புக்காக இத்தனை பேர் விழாவில் கலந்துகொண்டதை பார்த்து, நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

இந்த படத்தில், குடித்துவிட்டு ரோட்டில் கிடப்பவர்களை பார்த்தால் அது நடிப்பது போல தெரியவில்லை. குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்களை படம் எடுத்து வைத்துள்ளீர்கள். நாளைக்கு படம் வந்த பிறகு, குடிப்பது என் உரிமை. இதை எதுக்காக படம் எடுத்தீங்க என, எத்தனை பேர் கேஸ் போடப் போறாங்கன்னு தெரியலை, என்று நகைச்சுவையாக எச்சரித்தார்.

சற்று முன்