- Advertisement -
Homeபொழுதுபோக்குவயசான ஹீரோக்களை மறைமுகமாக சாடிய நடிகர் அப்பாஸ் - அவர் சொல்றது சரிதானே என சப்போர்ட்...

வயசான ஹீரோக்களை மறைமுகமாக சாடிய நடிகர் அப்பாஸ் – அவர் சொல்றது சரிதானே என சப்போர்ட் செய்யும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என டாப் ஹீரோக்கள் என எடுத்துக்கொண்டாலே அவர்களின் பலரும் 50 முதல் 70 வயது வரை கடந்தவர்களாக தான் இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் முதியவர்கள் என்பதை மறந்து ரசிகர்களிடம் மறைத்து திரையில் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

தமிழில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருமே 70 வயது கடந்து விட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் இப்போதும் ஹீரோக்களாக தான் நடிக்கின்றனர். ஆனால் சத்யராஜ் சரத்குமார் கே பாக்யராஜ் பிரபு போன்றவர்கள் ஹீரோ இமேஜை விட்டு இறங்கி அப்பா அண்ணன் போலீஸ் அதிகாரி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

ரஜினி கமல் போன்ற சூப்பர் சீனியர் ஹீரோக்கள் சினிமா நடிப்பில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டு வளரும் இளம் கலைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுவும் ஹீரோயிசம் காட்டும் படங்களில் தள்ளாடும் வயதில் அவர்கள் தொடர்ந்து நடிப்பதும் ஒரு ஏமாற்றுவேலையாகவே இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அப்பாஸ் கூறியதாவது, நான் சினிமாவில் இருந்து வெளியே வந்து 12 வருஷம் ஆச்சு. நான் ஏன் சினிமாவில் இருந்து வெளியே வந்தேன்னா எனக்கு போர் அடிச்சுருச்சு. எனக்கு போர் அடிச்சா படம் பார்க்கிற மக்களுக்கும் அதைவிட போர் அடிக்கும்.

- Advertisement -

நல்லா இல்லாத படத்தை பார்க்க எதுக்கு காசை வீணாக்கனும்? நல்ல கதைகள் வரலே. சும்மா என்னோட முகம் ஞாபகத்தில் இருக்கணும்ன்னு நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. என்னோட தொழிலுக்கு மரியாதை கொடுக்கணும். சும்மா நடிக்கணும் என்று நடிக்காமல் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்டு வாய்ப்பு கொடுக்கணும்.

நாம வேற வேலை ஏதாவது பாத்துக்கலாம் என்று நடிகர் அப்பாஸ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒரு பக்குவப்பட்ட நடிகராக அப்பாஸ் பேசியிருப்பதாக பாராட்டி கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், மறைமுகமாக ரஜினி கமல் குறித்து அப்பாஸ் விமர்சித்து பேசியிருந்தாலும் அது சரியான கருத்துதான் என்றும் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்