- Advertisement -
Homeபொழுதுபோக்குதெனமும் குடும்பத்துல, யாராவது கத்தியை எடுத்து வெட்டிக்கிட்டே இருக்காங்களா - படிடா பரமா டைப்பில் அட்வைஸ்...

தெனமும் குடும்பத்துல, யாராவது கத்தியை எடுத்து வெட்டிக்கிட்டே இருக்காங்களா – படிடா பரமா டைப்பில் அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

- Advertisement -

தமிழ் சினிமாவில், பெரும்பாலும் ஆக்‌ஷன் படங்களே வந்துக்கொண்டு இருக்கின்றன. பாகுபலி, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன், விக்ரம், கைதி, ஜெயிலர், சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி வரை, படம் முழுக்க பல இடங்களில் ஆக்சன் தான்.

சினிமாவில் பல இடங்களில் துப்பாக்கி சத்தமும், கத்தியும் ரத்தமுமாக காட்சிகள் வரும் பல படங்கள், யதார்த்த வாழ்க்கைக்கு தொடர்பில்லாததாகவே இருக்கிறது. ஆனாலும், இந்த படங்கள் வெற்றி பெறுவதால், அடுத்தடுத்த இத்தகைய படங்களே வரிசை கட்டி நிற்கின்றன. லியோவும் நிச்சயம் இந்த வரிசையில்தான் வரப் போகிறது.

- Advertisement -

இதுகுறித்து, நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு நேர்காணல் கூறுகையில், படிப்பது மிக முக்கியம். ஆனால் இயக்குநர்கள் பலரும் படிப்பதே இல்லை. ஒரு ஆள் குதிரையில் போய்க்கொண்டு இருந்தான் என படிக்கும் போது, நீங்கள் அவர் காட்டுக்குள் செல்வதாக நினைப்பீர்கள். நான் கடற்கரையில் செல்வதாக நினைப்பேன். இதுதான் விஷூவல் வித்யாசம். இப்படி அவரவருக்கு ஒரு கற்பனை தோன்றும்.

இந்த கற்பனை வர வேண்டும் என்றால் படிக்க வேண்டும். படிக்காவிட்டால், திரைக்காட்சியில் கண்டிப்பாக வறட்சிதான் இருக்கும். விசு, வி. சேகர், கே.பாலசந்தர் போன்றவர்கள் குடும்ப கதைகளை எடுத்தார்கள். பேமிலி டிராமா என்பதாக இருக்க காரணம், ஒவ்வொரு பேமிலிக்குள்ளும் நிறைய டிராமாக்கள் இருந்தது. ஆனால், எந்த குடும்பத்துக்குள் எப்ப பார்த்தாலும் ஒருத்தன் கத்தியை எடுத்து வெட்டிக்கிட்டு இருக்கான்.

- Advertisement -

எத்தனை நாளைக்கு கத்தியும், ரத்தமும் படம் வந்துகிட்டே இருக்க போகுது. இதுதான் சக்சஸ், இதுக்குள்ளதான் நாம் நிறையா காட்ட முடியும் என்று அதற்குள்ள போறதுதான். இதை தவிர்த்துட்டு, வேற வேற விஷயம் தெரியணும் என்றால், படிக்க வேண்டும். அப்போதுதான் வேறு மாதிரியான கதைகளை, படங்களை கொடுக்க முடியும். இதுல இருந்து வெளியே வரமுடியும் என்று கூறி இருக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.

- Advertisement -

சற்று முன்